நீட் மறுதேர்வு எழுதும் தேர்வரின் நுழைவுச் சீட்டில் தேர்வு மையமாக அபுதாபி எனக் குறிப்பிடப்பட்டிருந்த குளறுபடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமையை விமர்சித்து ராகுல் காந்தி கூறியதாவது, "நாக்பூரை சேர்ந்த ஒருவர், ஒரு மாதமாக நீட் மறுதேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் தேர்வெழுதுவதற்கான நுழைவுச் சீட்டில் தேர்வு மையம் அபுதாபி என்றிருந்தது.
அவரிடம் கடவுச்சீட்டு இல்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப அவரின் குடும்பத்தினரிடம் பணமில்லை. இப்போது நேரமுமில்லை. இது எப்படிப்பட்ட சூழல்? உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
இது எப்படி நடந்தது? உண்மையில், நாட்டின் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் பொறுமையை தேசிய தேர்வு முகமை சோதிக்கிறது.
ஒரு தேர்வரின் சொந்த நகரத்தில் ஒரு தேர்வு மையத்தை இந்த அமைப்பால் வழங்க முடியாது. ஆனால், அவர்களால் வெளிநாடுகளில் தேர்வு மையம் ஏற்படுத்த முடியும்.
இவர்கள் ஒரு முழு தலைமுறையின் பணம், நேரம், மன அமைதியைக் கொள்ளையடிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
நாக்பூரை சேர்ந்த தேர்வர் ஒருவரின் நுழைவுச் சீட்டில் தேர்வு எழுதும் மையமாக அபுதாபி எனக் குறிப்பிட்டிருந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் கிளப்பிய நிலையில், தற்போது தேர்வு மைய குளறுபடி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வரின் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
மேலும், உரிய சரிபார்ப்புக்குப் பிறகு சம்பந்தப்பட்ட தேர்வருக்கு நாக்பூரிலேயே தேர்வு மையம் அமைத்துத் தரப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Summary
Stop gambling with children's future: Rahul Gandhi slams govt over NEET aspirant exam centre mix-up
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: மாணவர்களை அழைக்கும் ராகுல்!

பணம் பறிக்கும் இயந்திரமாக மாறிய கல்வி அமைப்பு: பிரதமர் மௌனம் ஏன்? ராகுல் குற்றச்சாட்டு!

பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்... ஜூன் 17 முதல் ராகுல் காந்தியின் மாணவர் இயக்க மாநாடு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




