நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த அப்துல்லா மொஹம்மது தலிப் என்ற மாணவர், நீட் மறுதேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அவர் தன்னுடைய நீட் மறுதேர்வு நுழைவுச் சீட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் அபுதாபி என்று தேர்வு மையம் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அவரது தந்தை கூறுகையில், இத்தனை நாள்களாக அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் இருந்தது. பல முறை முயன்றோம். நேற்று மாலை நீட் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து, தேர்வு மையம் எங்கே உள்ளது என்று பார்த்தால் அது அபுதாபி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலில் எங்களுக்கு ஒன்றே புரியவில்லை. கடுமையான அதிர்ச்சியில் இருந்தோம். தேர்வு மைய நகரத்துக்கான வாய்ப்புகளில் நாங்கள் அதனை தேர்வு செய்யாத நிலையில் அபுதாபி என்று வந்திருப்பது எப்படி என்று அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனடியாக உதவி எண்ணை நாடினோம். அது குறித்து மின்னஞ்சல் அனுப்புமாறு அறிவுறுத்தினார்கள். நாங்களும் மின்னஞ்சல் அனுப்பினோம். வேறு பல நகரங்களை தேர்வு செய்யுமாறு எங்களுக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால், நாங்கள் நாக்பூரிலேயே வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.
இந்த குழப்பத்தால் மாணவர் அப்துல்லா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இரண்டு நாள்களாக அவர் அழுதுகொண்டேயிருந்தார். தேர்வெழுதப்போவதில்லை என்று எங்களிடம் கூறினார். ஆனால் நானும் அவரது தாயும் அவரை சமாதானம் செய்து வருகிறோம். எங்களிடம் பாஸ்போர்ட் வட கிடையாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மணவரின் சமூக வலைத்தளப் பதிவால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் மாற்று ஏற்பாடு செய்வதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் கொடுத்துள்ளது. மாணவர் தேர்வெழுத அபுதாபி செல்லத் தேவையில்லை, நாக்பூரில் உள்ள ஒரு தேர்வு மையம் ஒதுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








