நீட் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வினாத்தாள் கடினமாக இருக்கும் என்பது போன்ற தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், அவை அனைத்தும் புரளிகள்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
வினாத்தாள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் உலகத் தொடர்பிலிருந்து தனித்து வைக்கப்பட்டுள்ளனர். வினாத்தாளைப் பற்றி உண்மையில் அறிந்தவர்கள் யாரும் அது குறித்து வெளியில் பேசவே முடியாது. பிறகு, அது கடினமாக இருக்கும் என்பதெல்லாம் வெறும் ஊகங்கள்தானே தவிர உண்மையாக இருக்கும் என்பது உறுதியல்ல.
2026ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், 2 மாத கால இடைவெளியில் மீண்டும் ஜூன் 21ஆம் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை நீட் மறுதேர்வு எழுதவிருக்கிறார்கள்.
நீட் வினாத்தாள்கள் கசிந்ததாக எழுந்தப் புகாரின் கீழ், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் நீட்மறுதேர்வை எழுதவிருக்கிறார்கள். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்து இந்த தேர்வை எழுதும் மாணவர்கள் எண்ணிக்கையில் 6வது இடத்தில் தமிழகம் உள்ளது.
ஏற்கனவே, வினாத்தாள் கசிவு காரணமாக மறு-தேர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள்களை ஹெலிகாப்டரில் அனுப்புவது, வினாத்தாள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளி உலக தொடர்பு இன்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது போன்றவற்றை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டுள்ளது.
மேலும், இந்த மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வினாத்தாள் மிகக் கடினமாக இருக்கும் என்று பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கு எந்த அடிப்படை காரணங்களும் இல்லை. படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். வினாத்தாள் கடினம் என்றால் அனைவருக்குமே கடினம்தான். எனவே, இது குறித்து மாணவர்கள் பயப்பட எந்த அவசியமும் இல்லை என்றே கூறப்படுகிறது.
பல்வேறு அச்சங்கள் காரணமாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மறுதேர்வுக்கு தயாராகவில்லை என்றும் தரவுகள் கூறப்படுகின்றன. சில பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், மறுதேர்வுக்கான பயிற்சிக்கு பாதிக்கும் குறைவான மாணவர்களே வருகை தருவதாகக் கூறுகிறார்கள்.
ஏற்கனவே எழுதிய நீட் தேர்வை சரியாக எழுதாத மாணவர்கள் மறு தேர்வுக்குத் தயாராகாமல், அடுத்த வாய்ப்புகளைத் தேடிச் சென்றுவிட்டதும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
Summary
Will the NEET re-exam question paper be difficult? It is all just speculation!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வு! மாணவர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை!

நீட் மறுதேர்வு மன அழுத்தம்! கோவையில் மாணவி தற்கொலை

நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!

நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



