கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!

பிகார் இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளது பற்றி...

News image

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர். - பிடிஐ

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:04 pm IST

பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா, பிகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று (ஆக. 3) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பிகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர், ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில் எண்ண வேண்டிய வாக்குகளைவிட அவரது வாக்கு வித்தியாசம் அதிகமிருப்பதால் அவர் வெற்றி பெறுகிறார்.

தற்போது இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின்படி மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 24 -வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட 13,868 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

பங்கிப்பூர் தொகுதி பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனின் தொகுதியாகும். நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு தனது பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். அதன் விளைவாக நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலமாக பிகாரில் பிரசாந்த் கிஷோர் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

பங்கிப்பூர் தொகுதி சுமார் 31 ஆண்டுகளாக பாஜக வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தது. நிதின் நவீனுக்கு முன்னதாக அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் தொகுதியாக இருந்துள்ளது.

பாஜகவின் கோட்டையை தற்போது பிரசாந்த் கிஷோர் கைப்பற்றியுள்ளதால் இது அவருக்கு மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இது வரும் தேர்தல்களில் பிகார் அரசியல் சூழ்நிலையை மாற்றக் கூடும் என்று கருதப்படுகிறது.

அதேபோல கடந்த பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராக அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகியதன் எதிரொலியாகவும் இந்த இடைத்தேர்தல் முடிவு பார்க்கப்படுகிறது.

பங்கிப்பூர் தொகுதியில் மிகவும் குறைவாக 34% வாக்கு சதவீதமே பதிவானது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி இடைதேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் ததியா தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

Summary

Prashant Kishor wins in the Bihar by-election, He captures Nitin Navin constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.