ஒருவர், ஏதேனும் ஒரு காரணத்துக்காக வங்கிக் கணக்குத் தொடங்கி அதனை சில ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்து, அதில் பணமும் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆர்பிஐ தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஆர்பிஐ, தற்போது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு தகவலகளை அறிவுரையை நேரடியாக மக்களுக்கே வாட்ஸ்ஆப் செய்திகள் வாயிலாக பகிர்ந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்ட தகவலில், 2 ஆண்டுகளுக்கு மேல் வாடிக்கையாளரால் எந்தப் பரிவர்த்தனைகளும் செய்யப்படவில்லை என்றால், வங்கிக் கணக்கு செயலிழந்துவிடும். எனவே, ஒரு வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் இல்லாமல் 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலே அது செயலிழந்த வங்கிக் கணக்கு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.
உங்களுக்கும் அவ்வாறு ஒரு வங்கிக் கணக்கு இருந்தால்.. இரண்டு விவரங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்று. செயலிழந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த:
உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் வங்கியின் ஏதேனும் கிளையில் அல்லது வீடியோ KYC மூலம் உங்கள் KYC-ஐ புதுப்பியுங்கள்
உங்கள் வங்கிக் கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருங்கள்
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://rbikehtahai.rbi.org.in/tamil/index.html
ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது விவரமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்! என்று ஆர்பிஐ வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது, செயல்படாத வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை எடுத்துவிட்டு, அந்த வங்கிக் கணக்கை மூடுவதற்கான வாய்ப்புகளையும் ஆர்பிஐ தற்போது எளிதாக்கியிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி, தேவையற்ற வங்கிக் கணக்கை மூடிவிடுவது எதிர்காலச் சிக்கல்களில் இருந்து தவிர்க்க உதவும்.
Summary
What to do if there is money in an unused bank account...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வினா - விடை வங்கி... வரலாறு என்றால் என்ன?

விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!

ஓய்வூதியம் பெறும் முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி! மகன் கணக்கில்?

உங்கள் வங்கிக்கணக்கைப் பயன்படுத்த பணம் தருகிறார்களா? ஆர்பிஐ எச்சரிக்கை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



