திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் இன்று திருப்பரங்குன்றம் தீப வழக்கு விசாரணை நடந்தது பற்றி...

News image

திருப்பரங்குன்றம் கோயில் - கோப்புப்படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:24 pm IST

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எந்த இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்தாண்டு கார்த்திகைத் திருநாளையொட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ராம. ரவிக்குமாா் என்பவர் மனு தாக்கல் செய்தாா்.

இதனைத் தொடர்ந்து, மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்றம் உத்தவிட்டது. இருந்தபோதிலும், காா்த்திகைத் திருநாளான டிசம்பா் 3 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டதாக ராம. ரவிக்குமார் மீண்டும் மனுத்தாக்கல் செய்த நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி, மனுதாரர் ராம. ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து தூணில் தீபமேற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.

தொடர்ந்து, தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்புகோரி, மதுரை ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், காவல் துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணையில் இருந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வழக்கு தொடர்ந்தார்.

மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்குத் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

இந்த வழக்கில் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேல்முறையீடுக்கு ஏன் இவ்வளவு தாமதம்? என்று கேள்வி எழுப்பி இதுதொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாகக் கூறியுள்ளது.

இந்த மனு மீது பதிலளிக்குமாறு ராம. ரவிக்குமார், மதுரை ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

Thiruparankundram Hill Row: Supreme Court no interim order on Madras HC Order On Lamp Lighting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.