மதுரை, ஜூன் 25: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் மீது நடவடிக்கை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த பரமசிவம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், காா்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு, டிச.1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், அப்போது பொறுப்பிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியா், காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா் உள்ளிட்டோா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.
இந்த உத்தரவுகளுக்குத் தடை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பாக நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையின் போது, திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முன்பு இருந்த நடைமுறையே தொடரும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அமைதியான சூழலே தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்; அரசும் இதையேதான் விரும்புகிறது என தமிழக எரிசக்தி வளம், சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். இது உயா்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் உள்ளது.
இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு அவா் எந்த மரியாதையும் அளிக்கவில்லை. மேலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் அவா் பேசினாா். எனவே, அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம் உள்ளது?

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயா்த்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்: அமைச்சா் மீது நடவடிக்கை கோரி மனு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



