பிளாஸ்டிக் போன்றதொரு, பாலிமர் ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கும் முயற்சியை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. அதற்கான மூலப்பொருளை (சப்ஸ்ட்ரேட்) வழங்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை இந்திய ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.
சோதனை முயற்சியாக ரூ.10, ரூ.20 நோட்டுகளுடன் பாலிமர் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவிருப்பதாகவும், இது திட்டமிட்டபடி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் இவை படிப்படியாக அனைத்து ரூபாய் நோட்டுகளுக்கும் பரவலாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டில், இந்தியாவில் ரூ.10, ரூ.20 பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, ரூபாய் நோட்டுகளை தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருள்களைப் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து ரூபாய் நோட்டுகளும் பாலிமர் நோட்டுகளாக மாற்றப்படுமா என்பது குறித்து, 10, 20 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டு முடிவுகளைப் பொறுத்து அமையும் என்றும், முதற்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், 2027-ஆம் ஆண்டில் முழு அளவில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் பாலிமராக மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டுகள் முத்ரான் தனியார் நிறுவனம், ஆர்பிஐ சார்பில், உலகளவில் ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது. இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 18 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக, பாதுகாப்பு அம்சங்கள் உட்பொதிக்கப்பட்ட ஒளிபுகா பாலிமர் அடி மூலக்கூறு தாள்களை வழங்குமாறு உலகெங்கிலும் உள்ள உற்பத்தியாளர்களை அழைக்கும் வகையில், ஒரு உலகளாவிய விருப்ப அறிவிப்பை (ஒப்பந்தப்புள்ளி) வெளியிடப்பட்டுள்ளது.
இரு பக்கமும் அச்சிடக் கூடிய பாலிபுரோப்பிலீன் (BOPP) அடிப்படையிலான பாலிமர் அடிப்படை மூலக்கூறுகள், உத்தேச அளவாக 68,000 ரீம்கள் கோரப்பட்டுள்ளது. 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளுக்கு தலா 34,000 ரீம்கள் ஒதுக்கப்படும் (ஒரு ரீம் - 500 தாள்கள்).
இந்த பாலிமர் நோட்டுகளில், இந்தியப் பாதுகாப்பு அச்சிடுதல் மற்றும் நாணய அச்சகக் கழகம் (SPMCIL) ஆகியவற்றின் அச்சகங்களில் அச்சிடுவதற்கு ஏற்ற, உருவப்படத்துடன் கூடிய தெளிவான சாளரம், உலோகத்தில் அச்சிடப்படும் எண்கள், காந்த நூல், உருவம் உள்ளிட்டவை அச்சிடும் வகையில் திட்டமிடப்படுள்ளது.
Plastic currency notes coming soon to the country! RBI's plan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?

ஆர்பிஐ வேலைக்குத் திரும்பிய இஷான் கிஷன்..! வைரலாகும் புகைப்படங்கள்!
அறிமுகமாகும் பாலிமர் நோட்டுகள் | RBI | Sanjay Malhotra | Governor of the Reserve Bank of India

பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்? ஆர்பிஐ தகவல்
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp




