பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜூன் 30 முதல் காகித நோட்டுகள் செல்லாதா? மத்திய அரசு விளக்கம்

ஜூன் 30 முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படவிருப்பதாகப் பரவும் வதந்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு

Currency Note

பிரதிப் படம்

Published On :

நாட்டில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் கிழிந்து போவதைத் தவிர்க்கும் வகையில், அதற்கு மாற்றாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 முதல் மத்திய அரசு அறிமுகம் செய்யவிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. மேலும், ஜூன் 30 முதல் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் செய்திகள் பரவின.

சமூக ஊடகங்களில் பரவிய இந்த வதந்தியால், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் கூறியதாவது, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. மேலும், காகித நோட்டுகள் செல்லாது என்று பரவும் வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறித்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தொடர்பான எந்தவொரு தகவலையும் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Summary

Is RBI replacing paper currency with plastic notes from June 30, 2026?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.