2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்தாண்டு தொடக்கத்தில் முந்தைய திமுக ஆட்சியில் 2026- 27 இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து தவெக அரசு அமைந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக துறைவாரியாக முதல்வர் விஜய் தலைமையில் நாள்தோறும் ஆலோசனை நடைபெற்றது.
தொடர்ந்து கடந்த ஜூலை 16ல் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டமும் நடந்து முடிந்தது.
இதையடுத்து பட்ஜெட் தாக்கல் தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"கடந்த 15 நாள்கள் துறைரீதியாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சரவைக் கூட்டமும் நன்றாக முடிந்தது.
தொடர்ந்து தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும்.
தமிழக மக்கள் எங்களுடைய அரசுக்கு வரவேற்பு தெரிவிக்கிறார்கள், எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
2026 -27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Finance Minister Maria Wilson speaks on TN budget 2026 - 27
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் பட்ஜெட் மூன்று மடங்கு உயர்வு: முதல்வர் சர்மா!

சகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!

சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை!

”தமிழ்நாட்டின் உண்மையான நிதிநிலை!” அமைச்சர் மரிய வில்சன்! | TVK | TN Budget
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




