கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

அஸ்ஸாம் பட்ஜெட் மூன்று மடங்கு உயர்வு: முதல்வர் சர்மா!

அஸ்ஸாமின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக..

News image

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா - file photo

Updated On :10 ஜூலை 2026, 3:28 pm IST

அஸ்ஸாம் மாநிலத்தில் பட்ஜெட் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 2,00,782 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், நிதி பயன்பாடு 85 சதவீதமாக இருப்பதாகவும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

அஸ்ஸாம் நிதியமைச்சர் ஜெயந்த் மல்லா பருவா தனது முதல் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். மாநிலம் பொருளாதார மறுமலர்ச்சியைக் கண்டு வருவதாக அவர் கூறினார்.

வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் இந்த நிதிநிலை அறிக்கையின் நோக்கமாகும்.

2025-26 ஆம் ஆண்டில் பட்ஜெட் அளவு மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 2,00,782 கோடியாக உயர்ந்துள்ளது. அனைத்து பொருளாதாரக் குறியீடுகளும் சாதகமான நிலையைக் காட்டுகின்றன.

2015-16 இல் ரூ. 60,817 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2026-26-இல் ரூ. 1,85,429 ஆக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ. 39,294 கோடியாக உயர்ந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சர் ஜெயந்த் மல்லாவின் எக்ஸ் பதிவில்,

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் அஸஸாம் பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது.

நிதி ஒழுக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் மீதான அரசின் உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த மாநில பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அடிப்படையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது வலுவான, சுயச்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த அஸ்ஸாமிற்கான அடித்தளத்தை அமைப்பதாகவும் அவர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

Assam Chief Minister Himanta Biswa Sarma on Friday said the state's budget has seen a three-fold rise to Rs 2,00,782 crore and fund utilisation stands at 85 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.