கட்சி நிதி என்றதும் எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள் என்று கரூரில் முதல்வர் விஜய் பேசினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக கரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஜோசப் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
"கட்சி நிதி என்ற பெயரில் தீய சக்தி, தீர்ந்துபோன சக்தி கொள்ளை அடிக்கிறது. பேரவையில் 'கட்சி நிதி' என்று எந்த கட்சியின் பெயரையும் நான் சொல்லவில்லை, ஆனால் ஒரே ஓட்டம்தான். குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். இவர்களால் ஒரே வேடிக்கையாக இருக்கிறது
சென்னையில் பாலம் கட்டுவதற்கு ஆகும் செலவைவிட அதிக செலவுக்கு டெண்டர் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை ரத்து செய்திருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் ஊழல்தான். விஜய் திரும்பும் பக்கம் எல்லாம் அவர்களுக்கு காதில் ரத்தம் வராத குறைதான்.
லஞ்சம், ஊழல் ஒழிக்க முடியாது என்று சொன்னார்கள்... இன்று அரசு அலுவலகங்களில் எந்த லஞ்சமும், ஊழலும் இல்லை. அலுவலகங்களில் வேலை வேகமாக நடக்கிறது. மக்கள் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். அதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
எல் & டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக குறுவை சாகுபடி திட்டம். விவசாயிகளுடன் இந்த அரசு உடன் நிற்கும்.
அண்ணா பிறந்த நாளில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிவிக்கப்படும். இந்த விஜய், ரீல் தாய்மாமன் அல்ல, ரியல் தாய்மாமன்.
முதல்வர் வாயைத் திறங்க என்று பேசினார்கள். ஆனால் பேசினால் ஓடிவிடுகிறார்கள்" என்று பேசினார்.
Summary
Opposition parties ran off the moment party funds were mentioned: CM Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை

நலத்திட்டங்கள், அரசுப் பணி ஆணை, 10 கிமீ சாலை வலம்... கரூர் ஏற்பாடுகள் என்னென்ன?
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முதல்வர் விஜய்க்கு தடையில்லை! திமுக மனுவை தள்ளுபடி!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



