மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

தமிழ்நாடு

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை

கோப்புப் படம் - IANS

12:26 pm, 9 ஜூலை 2026

எரிந்த உடல்; தடயம் பூஜ்ஜியம்! காட்டிக் கொடுத்த அப்பள பேக்கட்!

ஆந்திர மாநிலம் ஆனந்தாபூர் பகுதியில், எரிந்த உடல் மட்டும் கிடைத்த சம்பவத்தில், ஒரு தடயமும் இல்லாத நிலையில்,ஒரே ஒரு அப்பளப் பாக்கெட்டை வைத்து காவல்துறை துப்பு துலக்கியிருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

12:26 pm, 9 ஜூலை 2026

கடும் நிதி நெருக்கடியில் சென்னை மாநகராட்சி! நிலுவை மட்டும் ரூ.2,000 கோடி? குப்பை வண்டி வருமா?

சென்னை மாநகராட்சியால், ஒப்பந்தம் விடப்பட்டு மேற்கொண்டு முடிக்கப்பட்ட பணிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையே ரூ.2,000 கோடி என்றும், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

9:56 am, 9 ஜூலை 2026

அரசுப் பேருந்துகளில் 'விடியல்' நீக்கம்!

9:56 am, 9 ஜூலை 2026

முதல்வர் விஜய் கரூர் செல்லவுள்ள நிலையில் ஏற்பாடுகள்!

கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக நாளை (ஜூலை 10) முதல்வர் விஜய் கரூர் செல்லவுள்ள நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

9:51 am, 9 ஜூலை 2026

தங்கத் தேர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் ஜூன் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கத்தேர் திருவிழா நடைபெற இருப்பதாகவும், அவ்விழாவில் அமைச்சர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்க இருப்பதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

9:50 am, 9 ஜூலை 2026

வயநாடு நிலச்சரிவு! பலி உயர்வு!

கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் மேலும் மூவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 6 - ஆக உயர்ந்துள்ளது.

7:47 am, 9 ஜூலை 2026

முதல்வர் விஜய்யை விமர்சித்த உதயநிதி

எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகத்திடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய்யை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

7:13 am, 9 ஜூலை 2026

ரெட் அலர்ட்!

வட மாநிலங்கள், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளுக்கு இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

7:10 am, 9 ஜூலை 2026

2029-ல் மோடியே பிரதமர்!

2029 மக்களவை தேர்தலிலும் மோடியே பிரதமராக வருவார், பாஜக ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

6:54 am, 9 ஜூலை 2026

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் தவெக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6:44 am, 9 ஜூலை 2026

கட்சித் தாவல் புகார்: பேரவைத் தலைவரிடம் முன்னாள் எம்எல்ஏக்கள் விளக்கம்!

6:00 am, 9 ஜூலை 2026

சகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!

புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் நாளை (ஜூலை 10) ஆஜராக உத்தரவிட்டிடப்பட்டிருந்த நிலையில் விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5:45 am, 9 ஜூலை 2026

மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!

மேற்கு ஆசியாவில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

5:44 am, 9 ஜூலை 2026

கரூா் சம்பவம்: அரசு வேலை வழங்குவது பின்விளைவுகளை ஏற்படுத்தும்!

கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரித்துள்ளார்.

5:44 am, 9 ஜூலை 2026

ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!

5:42 am, 9 ஜூலை 2026

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 9) எந்தெந்த வழக்குகளின் விசாரணை?

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீதான வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 9) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

5:42 am, 9 ஜூலை 2026

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

5:42 am, 9 ஜூலை 2026

முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்!

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணையை முதல்வர் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்குகிறார்.

5:42 am, 9 ஜூலை 2026

தங்கம் வாங்கலாமா?

தொடர்ந்து 4 ஆவது நாளாக தங்கம் விலை குறைந்தது...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.