கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

இன்று தங்கம் வாங்கலாமா? 4- வது நாளாக விலை குறைந்தது! (ஜூலை 9)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

News image

தங்கம் - கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2026, 9:46 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 9, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.

தொடர்ந்து 4 ஆவது நாளாக தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120, செவ்வாய் அன்று சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது.

நேற்று (புதன்) காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்திருந்த நிலையில், மேலும் ரூ. 640 குறைந்தது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 9, வியாழன்) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,220-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவதாகக் கூறியுள்ள நிலையில், உலகளவில் முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Summary

chennai gold and silver price today july 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.