சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்திருந்த நிலையில், மேலும் ரூ. 640 குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் திங்கள்கிழமை விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,08,480-க்கு விற்பனையானது.
தொடர்ந்து செவ்வாய்கிழமை விலை மேலும் குறைந்தது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 110 குறைந்து ரூ. 13,450-க்கும், சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 1,07,600-க்கும் விற்பனையானது.
இதனிடையே, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து விற்பனையான நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், மேலும் சவரனுக்கு ரூ. 640 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,06,000-க்கும், ஒரு கிராம் ரூ. 13,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
In Chennai, the price of ornamental gold, which had dropped by Rs. 560 per sovereign this morning (July 8), has decreased by a further Rs. 1,040.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை! எவ்வளவு தெரியுமா? (ஜூலை 14)

தங்கம் விலை திடீர் உயர்வு! மாலை நிலவரம்! (ஜூலை 9)

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் (ஜூலை 7)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்?(ஜூன் 26)
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




