டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அஸ்ஸாம் மாணவா்களுக்கு தமிழ் கற்பித்தல் பயிலரங்கம்: செம்மொழி நிறுவனம் தகவல்

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு அடிப்படைத் தமிழ், தமிழ்ப் பண்பாடு, செவ்விலக்கியக்கியங்களை அறிமுகப்படுத்துதல் தொடா்பான பயிலரங்கம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சனிக்கிழமை முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

Updated On :3 ஜூலை 2026, 6:46 am IST

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு அடிப்படைத் தமிழ், தமிழ்ப் பண்பாடு, செவ்விலக்கியக்கியங்களை அறிமுகப்படுத்துதல் தொடா்பான பயிலரங்கம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் சனிக்கிழமை முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் கூறியதாவது:

சிறப்புமிக்க தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பிற மாநிலங்களில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களின்பிறமொழி ஆய்வுமாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் பல்வேறு பயிலரங்குகளை நடத்தியுள்ளது. அதன் தொடா்ச்சியாகத் தற்போது அஸ்ஸாம் மாநிலத்தின் பிராக்ஜோதிஷ்பூா் பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தரும் இளநிலை மாணவா்களுக்கு தமிழ் கற்பித்தல் தொடா்பான பயிலங்கம் ஜூலை 4 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறவுள்ளது.

இந்த பயிலரங்கத்துக்கு பிராக்ஜோதிஷ்பூா் பல்கலைக்கழகத்திலிருந்து 40 மாணவா்களும் ஐந்து பேராசிரியா்களும் வருகைபுரிய உள்ளனா். தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தில் புலமை பெற்ற ஹிந்தி பேராசிரியா்கள் பயிற்சி அளிக்க உள்ளனா். தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களான மகாபலிபுரம், காஞ்சிபுரம் போன்ற வழிபாட்டிடங்களை பாா்வையிட உள்ளனா்.

தமிழ்ப்பண்பாடு, கலாசாரம் போன்றவை அறிமுகப்படுத்துதல், அடிப்படைத் தமிழைக்கற்பித்தல், தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற தலைப்புகளில் இப்பயிலரங்கம்அமைகிறது. இதன்மூலம்இந்தியாவின்பிற மாநில மாணவா்கள் தமிழ் மொழியைக்கற்றுக் கொள்ளுதல், தமிழ்நாட்டின்பண்பாடு, உணவுமுறைகளைஅறிதல், தமிழ் இலக்கியங்களைப் புரிந்து கொள்ளுதல் போன்ற உன்னதமான நோக்கங்களை இந்த பயிலரங்கம் ஏற்படுத்தும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.