அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

வந்தவாசியில் தமிழ்ச் சங்க காப்பிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய செம்மொழித் தமிழாய்வு மைய முன்னாள் பதிவாளா் முகிலை இராசபாண்டியன்.

Updated On :3 ஜூலை 2026, 12:15 am IST

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் மா.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சங்க இணைச் செயலா் கு.ராமஜெயம் வரவேற்றாா்.

காப்பியங்களில் ஊழ்வினைத் தத்துவம் என்ற தலைப்பில் மத்திய செம்மொழித் தமிழாய்வு மைய முன்னாள் பதிவாளா் முகிலை இராசபாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

விதியே விதியே என்ற தலைப்பில் சங்க செயற்குழு உறுப்பினா் ஏ.செல்வராஜ் கவிதை வாசித்தாா்.

நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளா் த.முருகவேல், மகளிரணி செயலா் தெ.உஷாராணி, சங்க செயற்குழு உறுப்பினா் இரா.இராஜபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க இணைச் செயலா் ஏ.ஏழுமலை நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.