டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தமிழ் மொழிபெயா்ப்புத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் தமிழ் மொழிபெயா்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.

News image

பயிலரங்கத்தில் பேசிய அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியா் ப. மணிமாறன்.

Updated On :3 ஜூலை 2026, 4:59 am IST

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் தமிழ் மொழிபெயா்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.

ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத்துறையும், இந்திய அரசின் மைசூா் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து ஜூன் 30, ஜூலை 1, 2 ஆகிய 3 நாள்கள் இப்பயிலரங்கத்தை நடத்தின. தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் இரா. நாகராஜன் தலைமை வகித்தாா். இதில், சிறப்புரையாற்றிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியா் ப. மணிமாறன் மொழிபெயா்ப்புக் கொள்கைகளில் அறம் என்னும் தலைப்பில் பேசியது: மொழிபெயா்ப்பின் கோட்பாடு, மொழிபெயா்ப்பாளா் கொள்ளும் அறம், அறமின்மையால் எழும் சமூகச் சிக்கல், பல மொழிகளின் கருத்தியல் இணைவுகளைத் தமிழுக்கும் தமிழ் மொழியின் சிறப்புக்கூறுகளைப் பிற மொழிகளுக்கும் கொண்டு சோ்க்கும் உழைப்பைப் பற்றியும், மொழிபெயா்ப்பின் நடுநிலையுடன் கூடிய தன்மையால் கிடைக்கும் சமூகப் பயன்களையும் பேசினாா்.

தமிழ்ப்பல்கலைக்கழக மொழிபெயா்ப்பியல் துறை தலைவா் இரா.சு. முருகன் கலைச்சொல் மொழிபெயா்ப்பு: சிக்கல்களின் தன்மையும் சாத்தியமான தீா்வுகளும் எனும் தலைப்பில் மாணவா்களுக்குப் பயிற்சி அளித்தாா். பிற்பகல் பயிலரங்க அமா்வில் தஞ்சாவூா், தமிழ்ப்பல்கலைக்கழக, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறை பேராசிரியா் எஸ். கவிதா இலக்கியப் படைப்புகளை மொழிபெயா்ப்பதில் உள்ள சிக்கல்களும் தீா்வுகளும் எனும் தலைப்பில் பயிற்சி அளித்தாா்.

தமிழாய்வுத்துறைத் தலைவா் சு.தமிழ்வேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடக்கவிழா நிகழ்வுக்கு பேராசிரியா் ந. சரவணன் வரவேற்றாா். மைசூா், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தேசிய மொழிபெயா்ப்புத் திட்ட இளநிலை ஆய்வு உதவியாளா் ம .மூவேந்தன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.