FOLLOW US

ON GOOGLE DISCOVER

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எனது சான்றிதழைக் காட்டுகிறேன், அந்த பேரரசர் தனது டிகிரி சான்றிதழைக் காட்டுவாரா? அபிஜீத் தீப்கே

அமெரிக்காவில் தான் படித்தது குறித்த கேள்விகளுக்கு அபிஜீத் தீப்கே பதில்...

News image

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:40 pm IST

அமெரிக்காவில் தான் படித்ததற்கான கல்விக் கடன் தொடர்பான கடிதங்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அந்த பேரரசர் தனது டிகிரி சான்றிதழைக் காண்பிக்கத் தயாரா? என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அமைச்சர் பிரதானும் பதவி விலகினார்.

வேலையில்லாத இளைஞர்களை 'கரப்பான்பூச்சிகள்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதால் அபிஜீத் தீப்கே என்பவர் ஒரு 'ஐடி'யை உருவாக்கிய நிலையில், அது யாரும் எதிர்பாராத அளவுக்கு நாட்டில் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்காவிலிருந்த அபிஜீத் தீப்கே இந்தியா வந்தார். அவர் புணேவில் இதழியல் இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலை அறிவியல் பட்டமும் பயின்றுள்ளார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த அமித் திவாரி என்ற பாஜகவைச் சேர்ந்த சமூக ஆர்வலர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் பொருளாதார பின்னணி என்? தீப்கேவை வெளிநாட்டில் படிக்க வைக்கும் அளவுக்கு அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவரின் தந்தை பகவான்ராவ் திப்கேவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அபிஜீத் தீப்கே வெளிநாடு சென்று படிக்க பணம் எப்படி கிடைத்தது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எனது கல்விக்காக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து நான் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளேன். எனது படிப்புக்காக கல்விக் கடனும் வாங்கியுள்ளேன். அது இன்னும் நிலுவையில் உள்ளது, திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். இதை விசாரிக்க அனைவருக்கும் முழு சுதந்திரம் உண்டு. அதேபோல பாஜக தலைவர்களும் தங்களது கல்விச் சான்றிதழை வெளியிட வேண்டும்" என்று தீப்கே கூறியுள்ளார்.

அத்துடன் "எனது கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் தொடர்பான கடிதங்களை வெளியிட நான் தயாராக இருக்கிறேன். அந்த பேரரசர் தனது பட்டச் சான்றிதழைக் காட்டுவாரா?" என்றும் பதிவிட்டுள்ளார்.

பேரரசர் என அவர் பிரதர் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகக்

Summary

I am ready to reveal my scholarship letter & education loan letter. Will the emperor show his degree? Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.