கேரளம் மலப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழையால் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பல் அருகிலுள்ள பணக்காடு பகுதியில் தொடர் கனமழையால் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த நிலச்சரிவில் நூலிழையில் உயிர் தப்பினர். உயிரிழப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
நிலச்சரிவினால் நாடுகாணி - பரப்பனங்காடி மாநில நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருகிலுள்ள பாலக்காடு பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2019ல் இதே பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே கேரளத்தில் மலப்புரம், வயநாடு பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் பாலக்காடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தில் சமீபத்திய மழையால் இதுவரை 15 பேர் இறந்துள்ளதாகவும் 7 பேரைக் காணவில்லை எனவும் முதல்வர் வி.டி. சதீசன் தகவல் தெரிவித்துள்ளார்.
Summary
Major Landslide in Malappuram due to heavy rains in keralam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் நிலச்சரிவு; எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார்: வி.டி. சதீசன்

கேரளத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பாஜக எம்எல்ஏவுக்கு நடந்த விபரீதம்!

சீனாவில் பயங்கர நிலச்சரிவு! 1,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றம்!

கள்ளு கடைத் திறப்புக்கு எதிர்ப்பு! கேரள முதல்வருக்கு 10 வயது சிறுமி கடிதம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




