காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கரப்பான்பூச்சி ஜனதாவின் எதிர்காலத் திட்டம் என்ன? அபிஜீத் தீப்கே பதில்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்து அபிஜீத் தீப்கே கூறியது குறித்து...

News image

அபிஜீத் தீப்கே - ஏஎன்ஐ

Updated On :26 ஜூலை 2026, 9:39 pm IST

ஜந்தர் மந்தர் போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அபிஜீத் தீப்கே, ''எதிர்கால உத்தியை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்கள் போராட்டம் நேற்றுதான் முடிவடைந்தது. எனவே எங்களுக்குச் சிறிது அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பஞ்சாப் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம். அதற்கான திட்டமிடலில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

கரப்பான்பூச்சி ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். மாணவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதியக்கூடாது.

வினாத்தாள் கசிவு தொடர்பான சட்டத்தில் கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையிலான திருத்தங்களை அரசு முன்மொழிந்துள்ளது. இதில் விரைவு நீதிமன்றங்கள், துரித விசாரணைகள், 10 கோடி ரூபாய் வரையிலான அபராதம் மற்றும் குறைந்தபட்ச சிறைத்தண்டனையை மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனையை பத்து ஆண்டுகளாகவும் உயர்த்துவது ஆகியவை அடங்கும்.

இருப்பினும், வலுவான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தெளிவான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (SOP) மூலம் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்வதையே முன்கூட்டியே தடுப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஒரு கூட்டாட்சி நாடாக, மாநிலங்கள் தங்கள் சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்த இந்தியா அதிகாரமளிக்க வேண்டும். அதேவேளையில், இந்திய அரசு பாதுகாப்புத் தரநிலைகள், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPs) மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க வேண்டும்'' என அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.

Summary

Planning future strategy CJP founder Abhijeet Dipke on Punjab paper leak issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.