கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
31 வயதாகும் மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ என மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார்.
இதற்கு முன்பாக கடந்த இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, தொடர்ச்சியாக மூன்றாவது தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
Summary
Weightlifter Mirabai Chanu has won the gold medal at the Glasgow Commonwealth Games.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

அசைக்கமுடியாத மனோதிடம்... முதல் பதக்கம் வென்றவருக்கு மோடி புகழாரம்!








