FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கே

போராட்டத்தில் தாக்குதல் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கேட்பதாக சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பதிவு...

News image

அபிஜீத் தீப்கே (கோப்புப் படம்) - ENS

Updated On :21 ஜூலை 2026, 10:06 am IST

தில்லியில் நடந்த சிஜேபி கட்சிப் போராட்டத்தில் மாணவர்கள் மீது தில்லி காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு அந்த கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எங்களுடைய ஆதரவாளர்கள் அனைவரிடமும், குறிப்பாக ஆண் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்தப் பெண்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். தில்லி காவல்துறையின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்.

20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான தர்மேந்திர பிரதான் ஒருவரைக் காப்பாற்றுவதற்காக மேலும் பல இளம் மாணவர்களின் ரத்தம் சிந்தவைக்க அரசு நினைக்கிறது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாரேனும் இதைப் பார்த்தால் தயவுசெய்து எனக்குத் தனிப்பட்ட செய்தி அனுப்புங்கள். நான் உங்களிடம் நேரில் பேசி மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தில்லி போராட்டம்

தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.

நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள சூழலில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தியபோது சிஜேபி இளைஞர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி வந்த சிஜேபி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் வீசி கலைத்தனர். இதில் இளைஞர்கள் பலரும் காயமடைந்தனர்.

தொடர்ந்து இன்றும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

Summary

I apologize to the youth, especially to the women: Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.