தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் புத்தகப் பை சுமையும் இனி குறைக்கப்படும், அதனால் மாணவர்களின் மனச்சுமையம் குறையும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் கல்வி இப்போது முதல் மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம். குழந்தைகளை மையமாக வைத்து கல்வி மாறப்போகிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கல்வி அளிப்பதோடு, பெற்றோரை மதிக்கும் வகையில் கல்வித் திட்டம் மாற்றப்படும்.
கதைகளின் வடிவில் மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரப்படும். புத்தகப் பை சுமை குறைக்கப்படும். இதனால், மாணவர்களின் மனச்சுமையும் குறையும் என்றார்.
பாடப் புத்தகங்களில், எழுத்துகள் குறைந்து, அதனை எளிதாக விளக்கும் வகையில் வண்ணப் படங்கள் அதிகரிக்கப்படும். படங்களே பாடங்களைப் பற்றி குழந்தைகளிடம் பேசும். பாடங்களுடனே க்யூஆர் கோடு இருக்கும். அதனை ஸ்கேன் செய்தால் பாடங்கள் காணொலியாக வரும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும். எனவே செய்யறிவு எனப்படும் ஏஐ குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஒருபோதும் ஏஐ நமது வேலைகளை பறித்துவிடாது.
பள்ளிகளுக்குள், திறமையை வைத்துத்தான் ஆசிரியர்கள் உள்ளே வர முடியும். அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களிடைய செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவிக்கப்போகிறோம். கல்வித் துறையிலிருந்து ஊழலை ஒழிப்பதே முதல் பணி என்று கூறினார் அமைச்சர் ராஜ்மோகன்.
Summary
No more heavy school bags: Minister Rajmohan said
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










