அரசு மருத்துவமனையிலிருந்த சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கடந்த ஜூன் 20 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடங்கிய போராட்டம் நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சோனம் வாங்சுக்கை தனியார்ர் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, அவரது மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ, தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு மருத்துவமனையில் உள்ள சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் என உத்தவிட்டனர்.
இதையடுத்து, சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையிலிருந்து குருகிராமில் உள்ள மெடாண்டா தனியார் மருத்துவமனைக்கு சோனம் வாங்சுக் மாற்றப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சஃப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, அவரது முக்கிய உடல் செயல்பாடுகள் சீராக இருந்தன. மேலும் அவரது ரத்ததில் பொட்டாசியம் அளவு 3.4 mEq/L ஆக இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், சிஜேபியின் கோரிக்கைகளை முன்நிறுத்தி, பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட முக்கியத் தலைவர்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Sonam Wangchuk has been shifted from the government hospital to a private hospital.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம்: உயர்நீதிமன்றம் அதிரடி!

சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனைவி கோரிக்கை!








