தில்லியில் சிஜேபி கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேசி வருகிறார்.
நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் ஒருபகுதியாக இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர், துணை ராணுவத்தினர் தடியடி நடத்தினர்,
தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி வந்த சிஜேபி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
பாதுகாப்பு கருதி நாடாளுமன்ற வளாகத்தின் கதவுகளும் மூடப்பட்டன. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தில்லியில் சிஜேபி போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசி வருகிறார். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர் ராஜிநாமா செய்யும் வாய்ப்பு குறைவுதான் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
ஆர்பிஐ அலுவலகம் அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்துவதால் குடியரசுத் தலைவர் மாளிகையும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
Summary
Education Minister Dharmendra Pradhan meets Home Minister Amit shah
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







