/

6 வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்சுகின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சோனம் வாங்சுக் 6 ஆவது நாளாக உண்ணாவிரதம்...

News image

ஆர்வலர் சோனம் வாங்சுக் 6 ஆவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்... - Instagram

Updated On :3 ஜூலை 2026, 6:08 pm IST

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஆர்வலர் சோனம் வாங்சுக் 6 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பெரும் இயக்கங்களில் ஒன்றான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 அன்று முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) 6 ஆவது நாளை எட்டியுள்ளது.

இதனால், சோனம் வாங்சுகின் உடல்நிலையில் ஒவ்வொரு மணிநேரமும் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதாகவும், முன்பைவிடவும் இன்று அவர் சோர்ந்து காணப்படுவதாகவும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுபற்றி மத்திய அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் மௌனம் சாதிப்பதாக, இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

Summary

Activist Sonam Wangchuk is observing a hunger strike for the sixth consecutive day, demanding that Dharmendra Pradhan resign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.