தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!

வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசியதற்கு முதல்வர் விஜய் மன்னிப்பு கோரியது பற்றி...

Chief Minister Vijay apologized in the Assembly for the Minister remarks

முதல்வர் விஜய் | வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் - TN

Published On :

வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் சார்பாக அவையில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் கருணாநிதியின் பெயரைக் கூறினார்.

திமுக செய்த சாதனைகளைப் பற்றி திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார்.

அப்போது இடையே எழுந்து வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், "திருமங்கலம் பார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி திமுக உறுப்பினர் அடுக்கடுக்காக கூறி வந்தார். 2026ல் ஓட்டுக்கு ஒரு ரூபாய்கூட பணம் கொடுக்காமல் எங்கள் முதல்வர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்" என்றார்.

இதையடுத்து முன்னாள் முதல்வர் பற்றி கூறியது அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இதையடுத்து, 'முன்னாள் முதல்வர்' என்று குறிப்பிடாமல் கருணாநிதியின் பெயரைச் சொல்லிப் பேசிய அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக முதல்வர் விஜய் பேரவையில் மன்னிப்பு கோரினார்.

"உங்கள் தலைவரின் பெயரை அவ்வாறு குறிப்பிட்டது தவறுதான். அவர் சார்பாக மன்னிப்பு (sorry) கேட்டுக் கொள்கிறேன்" என்று விதி 110 இன் கீழ் அறிவிப்புக்கு முன்னர் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

Summary

Chief Minister Vijay apologized in the Assembly for the Minister remarks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.