
காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி!
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்தது...

காஸாவில்.... - கோப்புப் படம் | AP
காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால், அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில், பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2025 அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், ஹமாஸ் படைகளுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி அங்குள்ள மக்கள் குடியிருப்புகள் மற்றும் அகதிகள் முகாம்களின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், காஸாவில் கடந்த 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் இதுவரைக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,040 ஆக அதிகரித்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்துடன், கடந்த 2023 முதல் இஸ்ரேல் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,75,168 ஆக அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காஸா நிர்வாகம் இன்று (அக். 01) அறிவித்துள்ளது.
கடந்த 2025 அக்டோபரில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகான இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 1,439 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
death toll from Israel's ongoing attacks on Gaza has surpassed 74,000.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





