
தங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக....

தங்கம் விலை - பிடிஐ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ரூ. 1,09,440 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,880 குறைந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 200 குறைந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்தது.
இன்றைய தங்கம் விலை
தொடர்ந்து இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
இன்று (அக். 1, வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.13,680-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 1,09,440 -க்கு விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
அதேபோன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 240-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
Today's gold and silver rate in chennai, Tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






