தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது! இன்றைய நிலவரம் (செப். 11)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தங்கம், வெள்ளி விலை - IANS

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 11) சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,920 குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தாலும் பெரும்பாலும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 480 குறைந்து செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து புதன்கிழமை சவரனுக்கு ரூ. 1,000 குறைந்த நிலையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்தது.

இன்றைய தங்கம் நிலவரம்

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 11) கிராமுக்கு ரூ. 240 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,015 -க்கும் சவரனுக்கு ரூ. 1,920 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,120 -க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி நிலவரம்

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 245 -க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.