
தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (செப். 4)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம் விலை - படம்: பிடிஐ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 4) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த செப். 2-இல் சவரனுக்கு ரூ. 1,800 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனையானது.
இதையடுத்து, வியாழக்கிழமை விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ரூ. 14,240-க்கும், சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்து ரூ. 1,13,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 4) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,880-க்கும் கிராமுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Summary
The price of ornamental gold in Chennai has increased by Rs. 960 per sovereign today (Sept. 4).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






