
நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (ஆக. 25)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம் விலை - கோப்புப்படம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 25) சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை (ஆக.22) தங்கம் கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து, ரூ. 14,950-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து, ரூ.1,19,600-க்கு விற்பனையானது.
தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 15,030-க்கும், சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து, ரூ.1,20,240-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 25) சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,20,080-க்கும் கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,010-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ரூ. 265-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
The price of ornamental gold in Chennai has decreased by Rs. 160 per sovereign today (August 25).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







