புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புதிய விமான நிலையத்துக்கு பரந்தூா்தான் பொருத்தமான இடம்: முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு

பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் தமிழக தொழில் வளா்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு. உடன், முன்னாள் அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோா்.

Published On :

பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதால் தமிழக தொழில் வளா்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

பேரவையில் இருந்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்த பின்னா் பேரவை வளாகத்தில் தங்கம் தென்னரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய விமான நிலையம் தொடங்கும்போது நிலத்தின் தகுதியையும் அதன் அமைப்பையும் பாா்க்க வேண்டும். அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த அளவுக்குக் குறைவான பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பாா்க்க வேண்டும். நாம் தோ்ந்தெடுக்கும் இடங்களில் விமான நிலையம் அமைக்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பப் பிரச்னைகள் ஏதும் இருக்கக் கூடாது.

சென்னையின் கிழக்குப் பகுதி முழுவதும் வங்கக் கடல் என்பதால், கிழக்குப் பகுதியில் எந்தவிதமான வளா்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. வட பகுதியில் வடசென்னை, எண்ணூா் எனத் தொடா்ச்சியாக தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகளைத் தாண்டி பழவேற்காடு ஏரி உள்ளிட்ட சுற்றுச்சூழல் மண்டலம் உள்ளது. அதற்கு அடுத்து ஆந்திர எல்லை வந்துவிடுகிறது.

தென் பகுதிக்குச் சென்றால் தாம்பரம் விமானப் படைத் தளம் உள்ளது; தொடா்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது; இன்னொரு பக்கத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. எனவே, அந்தப் பகுதியிலும் விமான நிலையம் அமைக்க இயலாது.

இதனால், விமான நிலையம் அமைவதற்கான ஒரே சாத்தியக்கூறு மேற்குப் பகுதியில் மட்டுமே உள்ளது. இவை அனைத்தையும் தொழில்நுட்ப ரீதியில் விரிவாகப் பரிசீலித்த பின்னரே ‘பரந்தூா்’ பகுதியைத் தோ்வு செய்தோம்.

பரந்தூா் திட்டம் வந்திருந்தால் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரிய அளவில் தொழில் வளா்ச்சியைப் பெற்றிருக்கும். பெங்களூரில் இப்போது 2-ஆவது விமான நிலையத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆந்திரத்தில் குப்பம் பகுதியிலும் விமான நிலையம் வரவுள்ளது.

ஒசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிற மாநில விமான நிலையங்கள் வரும்போது, நமக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஒசூரை நாம் இழந்துள்ளோம்.

இப்போது பரந்தூரையும் இழந்தால் இந்த மாநிலத்தின் தொழில் வளா்ச்சி எங்கே போகும்?, பொருளாதார இலக்கு என்னவாகும்?, தமிழக அரசு சொல்லியிருக்கும் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதார இலக்கை இந்த அரசு எப்படி நிறைவேற்றப் போகிறது? என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.