
தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 18)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

தங்கம், வெள்ளி விலை - IANS
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,160 உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து வருகிறது.
சென்னையில் தங்கம் விலை, கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 360 -ம், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 680 -ம் குறைந்தது.
புதன்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்த நிலையில் வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் நிலவரம்
இன்று (செப். 18, வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ. 145 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,155-க்கும் சவரனுக்கு ரூ. 1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 113,240-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி நிலவரம்
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 255 -க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
Today Gold and silver price in Chennai, Tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






