காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 4 பாலஸ்தீனா்கள் பலி, 12 பேர் காயம்
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள் பற்றி....

காஸா
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 4 பாலஸ்தீனா்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸா முனை முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 4 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்திய பலியை உறுதிப்படுத்திய ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை அதிகாரி, காஸா நகருக்கு வடக்கே அமைந்துள்ள தவாம் பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
தெற்கு காஸாவில், கான் யூனிஸ் நகரின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு பாலஸ்தீனியர் பலியானதை நாசர் மருத்துவமனை உறுதிப்படுத்தியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, மற்றொரு தனித்தனி சம்பவத்தில், காஸா நகரின் மேற்குப் பகுதியில் வாகனம் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அதேபோல் தெற்கு காஸாவின் அல்-மவசி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரம் ஒன்றின் மீதான ட்ரோன் தாக்குதலில் மற்றொருவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்தது. எனினும், ஹமாஸ் படையினரைக் குறிவைத்தே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் புகுந்து கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி திடீா் தாக்குதல் நடத்தினா்.
இந்தத் தாக்குதலில் 1,200 போ் பலியாகினர். மேலும் 251 பேரை ஹமாஸ் அமைப்பினா் சிறைபிடித்துச் சென்றனா். உலகம் முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
At least four Palestinians were killed and 12 others injured in a series of Israeli attacks across the Gaza Strip since dawn on Sunday, Al Jazeera reported, citing local medical sources.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






