முதல்வர் விஜய் பிரதமர் ஆவாரா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்!
முதல்வர் விஜய் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பதில் குறித்து...

அமைச்சர் நிர்மல் குமார் - From Video Grab
முதல்வர் விஜய் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் செவ்வாய்க்கிழமை (செப். 1) பதில் அளித்தார்.
தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்தான் 2029 மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் என்று சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
இதனிடையே, அடுத்த பிரதமர் யார்? என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் முதல்வர் விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமாரிடம், முதல்வர் விஜய் பிரதமர் ஆவார் என்ற சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து நிர்மல் குமார் பேசியதாவது:
இதில் எந்த சர்ச்சையும் இல்லை. தமிழகத்திலிருந்து ஒருவர் வர வேண்டும் என்பது அனைவரும் ஆசைப்படக் கூடிய ஒன்றுதான். காலக்கட்டத்துக்கு ஏற்றார்போல இயற்கையே ஒரு விஷயத்தை உருவாக்கும். இதனால் கூட்டணியில் எந்த முரணும் இல்லை. உங்களுக்கெல்லாம் சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக தினமும் இதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
கடந்த ஆண்டு இதே நேரத்தில், தவெக ஆட்சிக்கு வரும் என்று நாங்கள் சொன்னதற்கு அனைத்து பத்திரிகைகளும், கருத்துக் கணிப்புகளும் என்ன சொன்னது? ஆனால், எங்கள் தலைவர் முதல்வராவார் என நாங்கள் ஆணித்தனமாக சொன்னோம்.
இயற்கை தானாகவே ஒன்றை உருவாக்கும். அதுவரைக்கும் இதுபற்றி நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டாம். இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகள் உள்ளன. இவ்வாறு நீங்கள் கேள்வி கேட்பதால்தான் இது பெரிய விஷயமாக உருவாக்கப்படுகிறது.
யாருக்கோ தீனி போடவெல்லாம் இதைக் கேட்க வேண்டாம். இதனால், கூட்டணிக்குள் எந்தக் குழப்பமோ பிரச்னையோ இல்லை என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.
Summary
Electricity and Law Minister Nirmal Kumar responded on Tuesday (Sept. 1) to the question of whether Chief Minister Vijay would become Prime Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






