
நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கே
நீட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ரத்து என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவருக்குமான வெற்றி என அபிஜீத் தீப்கே பேசியது குறித்து...

அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்
நீட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ரத்து என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவருக்குமான வெற்றி என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் (சிஜேபி) அபிஜீத் தீப்கே இன்று (செப். 1) தெரிவித்தார்.
தில்லியின் ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய சிஜேபி ஆதரவாளர்கள், தர்மேந்திர பிரதான் பதவி விலகியதோடு, மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை அடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.
அதிலும் குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஒரு மாதமாகியும் வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என சிஜேபியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து, தில்லி போராட்டம் தொடர்பான வழக்குகளை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவர்களின் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்றும் உத்தரவிட்டது.
இதுகுறித்து அபிஜீத் தீப்கே பேசியதாவது:
உச்ச நீதிமன்றத்துக்கு எனது மனமாரந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், இன்று நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, ஜந்தர் மந்தரில் போராடிய அனைவருக்கும், நீட் தேர்வு சர்ச்சைகளால் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும் கிடைத்த வெற்றி.
நீட் வினாத்தாள் கசிவால் தங்களது பிள்ளைகளை இழந்தவர்களுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இது ஜந்தர் மந்தர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் போராடிய அனைவருக்கும் கிடைத்த வெற்றி. நீங்கள் உங்கள் குரலை எப்படி உயர்த்தினீர்கள் என்பது முக்கியமல்ல; நீங்கள் குரலை உயர்த்தினீர்கள் என்பதுதான் முக்கியம். இது உங்கள் அனைவருக்குமான வெற்றி என்று அபிஜீத் தீப்கே தெரிவித்தார்.
Summary
Abhijit Deepke, leader of the Karappanpoochi Janata Party (CJP), stated that the Supreme Court's verdict quashing all First Information Reports (FIRs) against those who participated in the NEET protests is a victory for everyone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





