
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்... ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியது பற்றி...

முதல்வர் விஜய் | தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால் தவெக தலைவர் விஜய் முதல்வராகத் தொடர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செவ்வாய்க்கிழமை (செப். 1) பேசினார்.
தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்தான் 2029 மக்களவைத் தேர்தலில் அடுத்த பிரதமர் என்று சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
இதனிடையே, அடுத்த பிரதமர் யார்? என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் முதல்வர் விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
இது ஒரு பெரிய பிரச்னையே கிடையாது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம். அதனால் எங்களைப் பொறுத்தவரை, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதிலே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை.
தமிழகத்தின் முதல்வராக விஜய் தொடர வேண்டும். அவர் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஊழலற்ற ஆட்சியைத் தொடர்ந்து, அவர் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி அவருடன் துணை நிற்கிறது.
ராகுல் காந்திக்கும், விஜய்க்குமான உறவு சகோரத்துவமானது. அந்த உறவு பலமாக உள்ளது. பல வகைகளில் நரித் தந்திர வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் சிக்காமல், முதல்வர் விஜய்யின் அரசு பலமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு நல்லது நடைபெற வேண்டும். மதச்சார்பற்ற அரசு தொடர வேண்டும். இந்த அரசு சமூக நீதிக்கான அரசு என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருக்கிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
Summary
Tamil Nadu Congress Committee President Manickam Tagore stated on Tuesday (Sept. 1) that while Rahul Gandhi is the Prime Ministerial candidate, TVK leader Vijay should continue as Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




