டிரம்புக்கு பதில் விஜய்கூட அமெரிக்க அதிபராகலாம்! இபிஎஸ் விமர்சனம்
டிரம்புக்கு பதில் விஜய்கூட அமெரிக்க அதிபராகலாம் என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதில் முதல்வர் விஜய்கூட அமெரிக்க அதிபராகலாம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திரைப்படங்களில் உள்ள காட்சிகளைப் போலவே தமிழக சட்டப்பேரவை நடைபெறுகிறது.
தமிழக அரசிடம் நிதி இல்லாமல் அதிக அறிவிப்புகள் ஏன் வெளியிடப்படுகின்றன என்று தெரியவில்லை.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில்தான் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஊழல் அதிகரித்துள்ளது. எங்குப் பார்த்தாலும் ஊழல் என்கிறார்கள். அது அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்.
தமிழ்நாட்டில் அரிசி, எண்ணெய், சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்புக்கு பதில் விஜய் கூட அமெரிக்க அதிபராகலாம். ரீல்ஸ் போட்டேதான் ஆட்சி நடத்துகிறார்கள். பேரவையை 24 மணி நேரம் கூட அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நடத்துவார். தற்போது வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக தொடர்கிறது.
நேரலையாக பேரவை நடவடிக்கைகள் ஒளிபரப்பினால்தான் மக்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியும். பேரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Summary
Even Vijay could become the US President instead of Trump! EPS's remark.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




