தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?

இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ

18-7-2026. TN/CHENNAI.   -    At Chennai's Koyambedu Wholesale Market, workers tirelessly loading massive onion sacks for supply, arrived directly fro

வெங்காயம் விலை - Center-Center-Chennai

Published On :

தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் உள்ளிட்டவற்றில் ரூ.35-க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் அறிவித்தாா்.

ஆனால், தற்சமயம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டும் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பேரவையில் இன்று பேசிய அமைச்சர் வெங்கடரமணன், ஈரான் போர் உள்ளிட்ட காரணங்களால் எரிபொருள் செலவு அதிகரித்தது, அண்டை மாநிலங்களில் காலநிலை தாக்கம் மற்றும் வெங்காயம் உற்பத்தி அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்துக் குறைந்தது போன்றவை தமிழ்நாட்டின் வெளிச் சந்தைகளில் வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனையாகி வருகிறது.

எனவே, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, தமிழக அரசு முதல் கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதான கூட்டுறவு பண்டக சாலைகள், அமுதம் அங்காடிகள், நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட 8839 நியாயவிலைக் கடைகளில் செப்டம்பர் மூன்றாம் தேதி முதல் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 விலையில் விற்பனை செய்யப்படும்.

தேவைப்படின் கூடுதலாக வெங்காயம் வாங்கப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனால் வெளிச் சந்தைகளில் வெங்காயம் விலை கணிசமாக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Onions to be sold at fair price shops for Rs. 35 from now on! But...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.