FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

நியாய விலைக் கடைகளில் இனி சன்னரக அரிசி! அமைச்சர் சொன்ன நல்ல செய்தி!

தீபாவளிக்குள் நியாய விலைக் கடைகளில் சன்னரக அரிசி வழங்கப்படும்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:22 pm IST

தீபாவளிக்குள் நியாய விலைக் கடைகளில் சன்னரக அரிசி வழங்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பி. வெங்கடரமணன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று(ஆக. 20) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, "நியாய விலைக் கடைகளில் வாங்கும் அரிசையை ஆட்டுக்கும், கோழிக்கும்தான் தீவனமாக்கிக் கொண்டிருக்கின்றனர். சன்னரக அரிசியை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதன் உற்பத்தி குறைவாக இருக்கிறது. சன்னரக அரிசி உற்பத்தியை பெருக்குவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், "முன்னாள் அமைச்சர் கே.என். நேருகூட ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறார். ரத்த சர்க்கரை அளவு குறையும் என்று, அந்த மோட்டா அரிசிதான் சாப்பிடுகிறார். அனைவரும் சாப்பிடுகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இன்றைய சூழலில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் ரேஷன் அரிசி சாப்பிடுவதில்லை. மக்கள் இட்லி மாவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

நமது ஆட்சியில் சன்னரக அரிசியை மக்களுக்கு கொடுப்போம் என முதல்வர் கூறினார். அதற்காகத்தான் சன்னரக நெல்லுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது” என்றார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பி. வெங்கடரமணன், “இனி வரும் காலங்களில், அதாவது தீபாவளிக்குள், மக்களுக்கு இனி சன்னரக அரிசி வழங்கப்படும். நம்மிடம் 64 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் இருக்கிறது. அதை அரிசியாக்கி மக்கள் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Summary

Minister for Food and Consumer Protection P. Venkataramanan announced that fine-variety rice would be supplied at fair price shops by Diwali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.