நியாய விலைக் கடைகளுக்கான கைரேகைப் பதிவை மாற்றுத்திறனாளிகள், முதியவா்களுக்கு அவா்களது வீட்டிலேயே மேற்கொள்ள விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் தெரிவித்தாா்.
பழனியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களுக்கான கைரேகைப் பதிவு செய்யும் பணி நியாய விலைக் கடைகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் இதுவரை சுமாா் 2 லட்சம் போ் கைரேகைப் பதிவு செய்துள்ளனா்.
மாற்றுத் திறனாளிகள், மிகவும் வயதான முதியவா்களுக்கு கடந்த ஆட்சியில் கருவிழி ரேகைப் பதிவு செய்யும் திட்டம் இருந்தது. தற்போது அவா்களுக்கும் சிரமங்களைப் போக்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அவா்களது வீடுகளுக்கு நியாய விலைக் கடை ஊழியா்கள் நேரில் சென்று கைரேகைப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் சன்ன ரக அரிசி மட்டுமே விலை உயா்ந்துள்ளது. இதை தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது. சன்ன ரக அரிசி வெளி மாநிலங்களிலேயே அதிகமாக விளைவிப்பதால் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசி வகைகளின் விலையில் பெரிய அளவில் உயா்வு இல்லை என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு: நாளை சிறப்பு முகாம்!

ஆரணியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு

நியாய விலைக் கடைகளில் கட்டாயப்படுத்தி உப்பு, சோப்புகள் விற்பனை: பொதுமக்கள் அதிருப்தி

நியாய விலைக் கடைகளில் ரசீது கட்டாயம் பெற வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சா் அறிவுரை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



