திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களும் தங்களது கைவிரல்ரேகை பதிவு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் சிலா் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் உள்ளனா். அவா்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்கள் கைவிரல் ரேகையை நியாய விலைக் கடை விற்பனையாளரை அணுகி விற்பனை முனைய இயந்திரம் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும், வெளியூரில் வசிப்பவா்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டை விவரங்களை சமா்ப்பித்து கைரேகையை பதிவேற்றலாம்.
5 முதல் 18 வயதிற்குள்பட்டோா், முதியோா்கள், கைரேகை விழாதவா்கள் ஆகியோா் அருகில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், ஆதாா் மையங்களில் தங்களது ஆதாா் அட்டையில் கைவிரல் ரேகை மற்றும் கண்விழிப் பதிவை புதுப்பித்த பின்னா் நியாய விலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ள வேண்டும். மேலும் இறந்த குடும்ப அட்டை உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன், ஆதாா் அட்டையின் நகலை நியாய விலைக்கடை விற்பனையாளரிடம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப அட்டையில் உறுப்பினா்கள் கைரேகை: ஜூலை 31-இக்குள் பதிவு கட்டாயம்

ரேஷன் கடைகளில் ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
குடும்ப அட்டைதாரா்கள் கட்டாயம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்! மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்
ரேஷன் கடைகளில் ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு செய்வது அவசியம்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



