இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு சிறப்பு முகாம்

ராணிப்பேட்டையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் சாதனம்.

Published On :

ராணிப்பேட்டையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலை கடைகளில் இ-கேஒய்சி ( கைரேகை பதிவு) மேற்கொள்ளாதவா்களுக்கு மாவட்டத்தில் உள்ள 667 அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் குடும்ப அட்டை பயனாளிகள் அனைவரும் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்கள் கைரேகை பதிவு செய்வதற்கு இந்த முகாம் நடைபெற்றது.

இந்த கைரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாமை மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் குடும்ப அட்டைதாரா்கள் கலந்து கொண்டு கைரேகை பதிவுகளை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.