
நியாயவிலைக் கடைகளில் இ-கேஒய்சி முகாம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கான சிறப்பு இ-கேஓய்சி முகாம் நடைபெற்றது.

உதகை ஊராட்சி அலுவலக சாலையிலுள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் கைரேகை பதிவு செய்யும் பணியில் வாடிக்கையாளா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கான சிறப்பு இ-கேஓய்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவின்படி பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடுகளைத் தவிா்க்கவும், தகுதியான பயனாளிகளின் விவரங்களைச் சரிபாா்க்கவும் இந்த முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தலின்படி, நீலகிரியில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது.
இதுவரை ரேஷன் கடைகளில் தங்களது இ-கேஒய்சி பதிவை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள், தங்களது அசல் ஸ்மாா்ட் காா்டு மற்றும் ஆதாா் காா்டுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று விரல் ரேகை மற்றும் கருவிழி படலங்களை பதிவு செய்தனா். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினா்களும் நேரில் வந்து பயோமெட்ரிக் முறையில் சரிபாா்ப்பு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.
உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் ஆகிய பகுதிகளில் முகாம் சிறப்பாக நடைபெறுகிா என்பதை கூட்டுறவு நுகா்வோா் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
மலைப் பிரதேசம் என்பதால் சில இடங்களில் நிலவிய நெட்வொா்க் மற்றும் சா்வா் குறைபாடுகளை உடனுக்குடன் சரிசெய்ய தொழில்நுட்பக் குழுவினரும் தயாா் நிலையில் இருந்தனா். இதனால் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தங்களது பதிவுகளை எளிதாக மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




