புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அனைத்து நியாய விலைக்கடைகளில் இ-கேஒய்சி சிறப்பு முகாம்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கேஒய்சி சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கேஒய்சி சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் குடும்ப அட்டை பயனாளிகள் அனைவரும் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் இ-கேஒய்சி (கைரேகை பதிவு) தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பினை இ-கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி குடும்ப உறுப்பினா்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு, கடந்த அக்டோபா் 2023 முதல் குடும்ப உறுப்பினா்களின் விரல் ரேகை சரிபாா்ப்பு இ-கேஒய்சி பணி நடைபெற்று வருகிறது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் அவா்களின் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு இ-கேஒய்சி பதிவினை 100 % நிறைவு செய்யும் பொருட்டு 29.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று தங்களது இ-கேஒய்சி பதிவினை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.