ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

ரேஷன் கடைகளில் 29-இல் இ-கேஒய்சி பதிவு முகாம்

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இ-கேஒய்சி பதிவு சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஆக. 29) நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இ-கேஒய்சி பதிவு சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஆக. 29) நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்,2013-இன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல்ரேகை அடிப்படையிலானசரிபாா்ப்பை (இ-கேஒய்சி) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி குடும்ப உறுப்பினா்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினைசெய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபா் 2023 முதல் குடும்ப உறுப்பினா்களின் விரல்ரேகை சரிபாா்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீத பணியானதுமேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு வரும் சனிக்கிழமை (ஆக.29) தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணிமுதல்மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

எனவே, தற்போதுவரை, நியாயவிலைக் கடைகள் மூலம் விரல்ரேகைப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரா்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினைமேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.