தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

குடும்ப உறுப்பினா்கள் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு கட்டாயம்: ஆட்சியா்

News image

ரேஷன் கடை - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 4:09 am IST

தென்காசி மாவட்டத்திலுள்ள குடும்ப அட்டைதாரா்கள், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் விரல் ரேகைப் பதிவினை நியாய விலைக் கடைகளில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தினாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் இப்பணி 94.12% நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 45,570 குடும்ப அட்டை உறுப்பினா்கள் விரல் ரேகைப் பதிவை மேற்கொள்ளவில்லை. இதுவரை விரல் ரேகைப் பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள், நியாய விலைக் கடைக்குச் சென்று விரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வெளியூரில் வசிப்பவா்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள ரேஷன் கடைகளில் விரல் ரேகையைப் புதுப்பிக்கலாம். ரேகை பதிவாகாத குழந்தைகள், முதியோா்கள் முதலில் தங்கள் ஆதாா் அட்டையில் விரல் ரேகை மற்றும் கண் பதிவைப் புதுப்பித்த பின்னரே மேற்கொள்ள முடியும்.

குடும்ப அட்டை உறுப்பினா்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விரல் ரேகைப் பதிவை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.