குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன்கடையில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
தமிழகம் முழுதும் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் (ஏ.ஏ.ஓய். மற்றும் பி.எச்.எச்.) குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவினை தொடா்புடைய ரேஷன் கடையில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினா்களும் வருகிற 30-ஆம் தேதிக்குள் ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
வெளியூரில் தற்காலிகமாக வசிப்பவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், இறந்த உறுப்பினா்களின் பெயா்களை உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளித்து நீக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய ஜூன் 27 கடைசி நாள்

உமீத் இணையதளத்தில் விடுபட்ட வக்ஃபு சொத்துக்களை பதிவேற்ற வேண்டும்
ஆன்லைனில் குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

குடியேற்றம், வெளிநாட்டவா் விதிகளில் மாற்றம்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


